ஃபிட்ச் ரேட்டிங்ஸ் இலங்கையின் மதிப்பீட்டை உயர்த்துகிறது

முன்னணி கடன் மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ், 2026.09.22 அன்று இலங்கையின் கடன் மதிப்பீடுகளை உயர்த்தியுள்ளது.

அதன்படி,

  • நீண்டகால வெளிநாட்டு நாணயக் கடன் மதிப்பீடு CCC+ இலிருந்து B- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • குறுகியகால வெளிநாட்டு நாணயக் கடன் மதிப்பீடு C இலிருந்து B ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • நீண்டகால உள்நாட்டு நாணயக் கடன் மதிப்பீடு CCC+ இலிருந்து B- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • குறுகியகால உள்நாட்டு நாணயக் கடன் மதிப்பீடு C இலிருந்து B ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நீண்டகால வெளிநாட்டு நாணய மற்றும் நீண்டகால உள்நாட்டு நாணய கடன் மதிப்பீடுகள் அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் மாற்றமின்றி தொடரும் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எதிர்பார்க்கிறது.

இந்தக் கடன் மதிப்பீடுகள் உயர்த்தப்பட்டதற்கான காரணங்கள்:

  • பெருநிலையியல் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள்
  • அரசாங்க வருவாய் அதிகரித்தல்
  • வெளிநாட்டு நாணய கையிருப்புகள் படிப்படியாக அதிகரித்தல்
 
 
 
Scroll to Top